
கலாக்ஷேத்ராவில் நடனம் பயின்ற மாணவி என்பதால் அந்த நடனப் பயிற்சியே எனக்குச் சிறந்த உடற்பயிற்சிக்கு அஸ்திவாரமாய் அமைந்திருக்கிறது. நடனக் கலை பயின்று, தேர்ச்சி பெற்றிருப்பதால் அழகையும், கவர்ச்சியையும் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது. நடிப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது. ஆகவே, அழகுப் பராமரிப்பில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!
அழகும், உடலமைப்பும் பொருத்தமாக அமைந்திருந்தால் ஒரு பெண்ணுக்கு எத்தகைய உடையும் ஏற்றதாய் அமைந்துவிடும். உதாரணமாக, என்னால் கிராமத்துப் பெண்ணாகவும், அதே நேரத்தில் நாகரிக நங்கையாகவும் தோற்றமளித்து, இந்த இரு தோற்றங்களிலும் மக்களின் பாராட்டைப் பெற முடிந்திருக்கிறது! சிலர், இன்னாருக்கு இன்ன நிறம் பொருத்தமாய் இருக்கும், இன்ன நிறம் பொருத்தமாய் இராது என்று கூறுவார்கள். சிவப்பாக இருப்பவர்கள் எந்த நிறத்திலும் உடை அணியலாம். கொஞ்சம் கறுப்பாகவோ, மாநிறத்திலோ தோற்றமளிப்பவர்கள் கொஞ்சம் மங்கலான வண்ண உடைகளை அணிவது நல்லது. என்னைப் பொறுத்தவரை எத்தகைய உடை வகைகளையும் அணிந்து கொள்வேன். இதில்தான் அழகாக இருப்பேன், இதில் இருக்க மாட்டேன்… என்பதல்ல. எந்த உடையிலும். எந்த ஒப்பனையிலும் அழகாகத் தோற்றம் தருவேன் என்பது என் நம்பி்கை.
No comments:
Post a Comment