Saturday, April 25, 2009

கண்டேன் சுகன்யாவை (By Sukanya Fan)



சினிமாவில் நடித்து புகழ் பெற யாருக்குத்தான் ஆசையில்லை?ஆனால் அந்தப் புகழ்
ஏணியின் உச்சிக்குப் போய்விட்டால் அப்பப்பா.அவர்களின் சுதந்திரம் போய்விடுகிறது வெளியில் இஷ்டப்படி வர முடிவதில்லை நண்பர்கள் குழாமுடன் பீச்சில் காலாற
அடக்க முடிவதில்லல எங்கு போனாலும் விசிறிகள் ,,,,,தேனீப்போல் சூழ்ந்துக்
கொள்கிறார்கள் போலீஸ் படை வரவேண்டி இருக்கிறது எல்லாம் ஏ,சி, காருக்குள்தான்
அவர்கள் உலகம் ,அல்லது பங்களாக்குள் தான் ,,,,,,வெளி நாடுகளில் நம்
இந்தியர்களின் படப்பிடிப்புக்கு அவ்வள்வு பேர்கள் மொய்ப்பதில்லை அவரவர் வேலையைக் கவனித்து போய் வ்ருகின்றனர் நான் பெல்ஜியம் போன போது மலர்கள் திருவிழா இருந்தது
அப்போது சில படப்பிடிப்பும் நடந்தது,,..கூட்டம் கூடாமல் இருப்பதைப்
பார்த்து வியந்தேன்,ஏதோ ஒரு இருவர் தூரத்தில் நின்று தொந்தரவு கொடுக்காமல் பார்க்கிறார்கள்,,,,,

நான் சமீபத்தில் திருவண்ணாமலைப் போயிருந்தேன் .அப்போது நான் தங்கி இருந்த
இடத்தில் நடிகை சுகன்யாவும் தன் உறவினர்களுடன் வந்திருந்தாள்,நான் அவளைப்
பர்ர்த்த போது ஒரு புன்முறுவல் அளித்தேன் அவளும் அதைத் திருப்பித் தந்தாள்,பின்
நான் அதை மறந்தே போனேன் ,மறு நாள் ஸ்ரீ யோகி ராம் சூரத் குமாரின் ஆஸ்ரம
சென்றிருந்தேன் அஙகும் அவளைக் கண்டேன் ,பேச ஆரம்பித்தோம் இன்னும் எவ்வள்வு
நாட்கள் இங்கு இருப்பீர்கள் ,,எதாவது ஷூட்டிங்கா?என்று கேட்டேன் "இல்லை
ஸ்ரீ ரமணாஸ்ரமத்திற்கு தான் வந்தோம் ,,நாளைப் போய்விடுவோம் என்றாள்,,
நானும் வந்துவிட்டேன் ,மாலை ரமணாஸ்ரமத்தில் ஸ்ரீ மஹாமேருவிற்கு சஹஸ்ரநாம
அர்ச்சனை கொடுத்திருந்தேன் அங்கு அவளும் வந்துவிட்டாள் ,என் அருகில்
அமர்ந்தாள் ரொம்ப அழகு ரொம்ப ஸிம்பிள் ,,நல்ல பண்பு மரியாதை எல்லாம் இருந்தன ,,
வேடிக்கை என்னவென்றால் அவள் தேவியைப் பார்க்க வருபவர்கள் எல்லோரும் கோவிலின் தேவியைவிட்டுவிட்டு இந்தத்தேவியைப் பார்க்க ஆரம்பித்தார்கள் என்க்கு எதோ போல் இருந்தது ஒரு குடும்பம் .வந்திருந்தது,,முதலில் அவர்கள் வீட்டு 12 வயது பெண் இவளைப் பார்த்து குடுகுடு என்று ஓடி தன் அம்மாவை அழைத்து,,ஹாய் சுகன்யா அம்மா,,என்று கூற அவளும் எங்கே எங்கே என்று பரபர என்று கண்ணால் தேட
பின் கண்டுபிடித்த மகிழ்ச்சி முகத்தில் ததும்ப தன் கணவரைக் கூப்பிட ஓடினாள்
"இங்கே வாங்கோன்னா ஒரு விஷயம்,,,,,"என்ன ,,இதோ வரேன் பூ வாங்கிக் கொண்டு,,,,,,,இது கணவர் "இல்லையில்லை.இப்போ வாங்கோ நம்ம சுகன்யா வந்திருக்கிராள் அப்புறம் பாக்க முடியாது "என்று கூறி அவர் கையைத் தரதர என்று இழுத்துக் கொண்டு வர அவரும் பரிதாபமாக நடக்க ,பின் அவருக்கும் சுகன்யயவின் தரிசனம் கிடைத்தது அங்கு ஆர்த்தி எடுக்கும் போது எல்லோர் கண்களும் சுகன்யா பக்கம் தான் ,,,,,நடுவில் நான் தியானத்தில் மூழ்கிவிட்டேன் எல்லோரும் எழுந்து நிற்பது தெரியாமல் கண்களை மூடிக் கொண்டிருந்தேன் .அப்போது என்னை எழுப்ப நானும் எழுந்து நின்றேன் ,பின் அம்பாளுக்கு ஒரு பாட்டு பாடச் சொல்ல நடிகை சுகன்யா தன்
இனிமையானக் குரலில் சிவன் மீது ஒரு பாட்டு பாடினாள் மிகவும் அழ்காக இனிமையாக
இருந்தது ,பின் நான் அவளிடம் கேட்டேன் "என்ன இன்று அக்ஷ்யதிருதியை தவிர மேரு பூஜை ஆகையால் லட்சுமி அல்லது அம்பாள் மேல் பாடி இருக்கலாமே " என்றேன் அவளும் இதை நானே இயற்றியது ஆகையால் இங்கு பாடத் தோன்றியது என்றாள் அவளை வாழ்த்திவிட்டு வந்தேன் .அன்று பல பேர்கள் சுகன்யாவைத்தான் ரசித்தார்கள் ..கோவிலை மறந்தார்கள் நாம் எங்கே போகிறோம் ?..,,,,,என்றகேள்வி என்னைக் குடைந்து எடுத்தது,
பாவம் நடிகர் நடிகைகளுக்கு எங்கு சுதந்திரம் ,,?,,,,,,,,

2 comments:

  1. My fav actress is also sukanya and it's great to see your blog on her. She is an amazing artist and it's unfortunate that tamil film industry didnt exploit her acting talents

    ReplyDelete